வாழவதற்கான வழிகளில் ஒன்று


மனம் சற்று களைப்படைவதைப் போலிருக்கையில் எல்லாம் பறவைகளைப் பார்த்துத் தான் உயிர்த்தெழுகிறேன்.

இந்தக் குறும்படத்தைப் பார்ப்பது இது மூன்றாவது முறை. அடிக்கடி இந்தத் தரிசனம் தேவையாயிருக்கிறது.

நெட்பிலிக்ஸில் இருக்கும் இந்தப் பறவைகளின் வாழ்வு மற்றும் காதலொழுக்கம், குறித்த ஐம்பது நிமிடக் குறும்படம் அதிசயங்களின் உச்சம். 

பறவைகள் காட்டும் அதிசயங்களை யாருக்கும் காட்டித்தரவே கூடாது என்று தோன்றும். ஊர்வன பறப்பன நேரே தெய்வமென்று பாரதி சொன்னதைப் போல நான் பறவைகளிடம் தான் எப்போதும் ஒரு வாழ்வை, ஆசிர்வாதத்தை, இசையை, கருணையை எதிர்பார்த்திருப்பேன். 

"வீக்கி வீக்கி வீக்கி" என்றொருவன் அழைக்கும் அழைப்பு எங்கள் வீட்டு வாசலில் பிரசித்தம்.
அவன் நினைவு தோன்றும் போதெல்லாம், அவன் வராத பொழுதெல்லாம் நாங்களே "வீக்கி வீக்கி"க் கொள்வது வழக்கம். இசை தான் எங்களுக்கும் அவனுக்குமான இணைப்புச் சரடு.

பறவைகள் மீட்பர்கள்..
அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். செய்வதைப் பாருங்கள். வாழ்வில் எல்லாமே கைகூடும்.

Comments