மிக முக்கியமான ஆவணப்படம்| Daughters of destiny | ARRahman | Netflix |

Untouchables என்று இச்சமூகம் தாழ்த்துகிறவர்களின் இல்லத்திலிருந்து ஒரு குழந்தையை சிறு வயதிலேயே தங்கள் பள்ளிக்காகத் தத்தெடுத்து அவர்களுக்கு ICSE பாடதிட்டக் கல்வி அளித்து கல்லூரிச் செலவு வரைக்கும் ஏற்கிற சாந்தி பவன் பள்ளியின் பயணக்கதை தான் நெட்பிலிக்ஸில் இருக்கிற daughters of destiny ஆவணப்படம். ஓரிடத்தில் அதன் நிறுவனரான ஜார்ஜ் சொல்கிறார். 

"ஜாதியென்னும் குப்பைக்கும் திறமையான இந்தக் குழந்தைகளுக்கும் எந்த சம்மந்தமும் இருக்கக் கூடாது.
ஒருவர் தன் திறமையால் உலகறியப்படவேண்டும். அதற்கு அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். அதைத் தான் நாங்கள் தரமுயல்கிறோம்."

கல்குவாரியில் வேலை பார்க்கிற ஒரு (Single parent) தாயின் மகளான கார்த்திகா, சாந்தி பவன் மூலம் கல்வி கற்று சட்டம் படிக்கக் கல்லூரியில் நுழைகிற வரைக்குமான இன்னொரு வாழ்க்கையை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள்.

கல்லூரியில் சில பேர் these poor people will have poor ideas என்பார்கள். I'm poor but i don't know what is poor idea. என்று அறிவார்ந்த கார்த்திகா சொல்வது, இந்த சமூகத்தின் இழிவான மந்தை மனநிலையின் மீதான, ஆதிக்க சாதியின், குணத்தின் மீதான வலுவான செருப்படியாகத் தெரிந்தது.

பெண் குழந்தைகளுக்குத் தரமான கல்வி அவசியம். தரமான கல்வி என்றால்,  ஒரு ஆணை முழுமையாகச் சார்ந்திருக்காமல், தற்சார்போடு தன் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வழிசெய்கிற அறிவு, சுதந்திரம், சக்தியை வழங்கும் கல்வி.

இதில் இன்னொரு மாணவியான ஷில்பா தன் கதையை ஒரு புத்தகமாக எழுதி ஒரு எழுத்தாளராகவும் ஆகிவிட்டார். அவரது புத்தகம் வீட்டில் வைக்க வேண்டிய அவசியமான ஒரு புத்தகம். 

புத்தகத்தின் பெயர். 

"The Elephant chaser's daughter" by shilpa raj.

சாதி மதக்குப்பைகள் எதற்கும் பயன்படாத ஒரு மனநோய். அந்த மனநோயைப் பிடுங்கிவிட்டுக் கல்வியெனும் உண்மையான கடவுளை பிள்ளைகளின் கையில் கொடுங்கள்.
~

|Daughters of destiny | ARRahman | Netflix |

Comments