ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா
'Herman Hesse'வின் சித்தார்த்தா புத்தகம் Coleman Barks'ன் Rumi Essential தொகுப்புக்களைப் போல. ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் பருக வேண்டிய அமிர்தம். தமிழில் திருலோக சீதாராம் "சித்தார்த்தன்" என்று மொழிப்பெயர்த்திருக்கிறார்.
எனக்கு அதை தமிழில் வாசிக்க வேண்டுமென்று ஆசை. புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறதென்றாலும் வாங்கவோ வாசிக்கவோ வழியில்லை. முடிந்தால் அதை ஆங்கிலத்தில் வாசியுங்கள். கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக.
கடவுள் ஒரு நூறு உருண்டைகளாகக் கைகளில் கிடைத்தால் அதை எத்தனை உருண்டையை எவ்வளவு பக்குவமாக எத்தனை நாளைக்கு உட்கொள்வீர்கள்? அப்படி உட்கொள்ள வேண்டிய மந்திரம் போன்ற பக்கங்கள். இந்த நேரத்தில் இந்தப் புத்தகங்களைத் தான் தீர்க்கமாக மனத்தில் இருத்திக் கொண்டிருக்கிறேன்.
Comments
Post a Comment