பேரா.தொ.பரமசிவன் குறித்துசிறுதெய்வம் என்னும் இருட்டடிப்புச் சொல்
~
சிலவற்றின் மீதான தெளிவை பேராசிரியர் தொ.பரமசிவனை அறிந்துகொண்டதற்குப் பின் அடைந்தேன் என்று சொல்லவேண்டும். குறிப்பாக இந்த சிறுதெய்வம் என்ற சொற்கூட்டை பயன்படுத்தும் விதம்.

எந்தக் குலதெய்வமும் சிறுதெய்வம் இல்லை. அவர்கள் தான் பெரிய தெய்வங்கள். நான் குலதெய்வ வழிபாட்டிலும், முன்னோர் வழிபாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவன். எனக்குப் பெரிய தெய்வம் என்றால் குலதெய்வத்தில் தொடங்கி முன்னோர்கள், அப்பாயி, ஐயா, காலம் சென்ற பெரியவர்கள், நண்பர்கள்.

சிறுதெய்வம் என்று ஒன்று இந்த உலகிலேயே இல்லை. அது சரியான இருட்டடிப்புச் சொல். எல்லா தெய்வமும் பெரிய தெய்வம் தான். உங்களுக்கு எது தெய்வம் என்பது உங்களுக்கே வெளிச்சம். எது உனக்கு சந்தோஷம் தருகிறதோ அதுவே உனக்குச் சூரியனென்பார் தேவதேவன். தமிழில் சின்னச் சின்னச் சொற்களும் எனக்குத் தெய்வம் தான். கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம் என்பான் பாரதி. கவிஞர்கள் தெய்வங்களின் தெய்வங்கள்.

Comments