சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்


சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்
~
ஒரு நல்ல புத்தகத்தை வாசித்து முடிப்பதற்கும் அடுத்த நல்ல புத்தகத்தை வாசிப்பதற்கும் இடையிலான நாட்கள் சற்று பதற்றமானவை. 

கடந்த மூன்று வாரங்களில் பல புத்தகங்களுக்குத் தாவி பல புத்தகங்களை, மேற்கொண்டு அதை ஒரே அமர்வில் வாசிக்கப் பிடிக்கால் இடையில் சில நல்ல திரைப்படங்களுக்குத் தாவி சற்று உத்வேகம் கூட்டிக்கொண்டு நேற்று மீண்டும் வாசிக்க வேண்டுமென்று மைக்கேல் ஜாக்சனின் முதல் பாதி வாழ்க்கையைக் கொண்ட சுயசரிதையான "MOONLIGHT" புத்தகத்தை வாசித்து முடித்தேன். பாப் இசையின் மன்னரோடு ஒரு நாள் வாழ்ந்ததற்கு இணையான அனுபவம். 

Rejevenating and Inspiring.

இதற்கு முன் முழுவதாக இசைக்கலைஞர் ஜான் லென்னனின் மனைவியான யோக்கோ ஓனோவின் GrapeFruit புத்தகத்தை வாசித்தேன். அட்டகாசமான, மனநிறைவைத் தந்த புத்தகம். 

Kind of A Magic Fruit it is.

மூன்றாவது, ஆலிவர் சேக்ஸ் எழுதிய MUSICOPHILIA. இசை நிகழ்த்தும் அற்புதங்கள் குறித்த புத்தகம்.

Therapeutic.

இதற்கிடையில் பாதியில் வாசிப்பதை நிறுத்திய புத்தகம் நிறைய உண்டு.. அதில் ஒன்று God Of Small Things. மிக ஆர்வமாகப் வாசிக்கத் தொடங்கி அளவுக்கு மீறிய வர்ணனைகளால் சலிப்பூட்டுவதைப் போல இருந்ததும் பாதியில் விட்டுவிட்டேன். அதைத் தொடர்ந்து வாசிக்க வேறொரு நல்ல நாள் தான் வாய்க்க வேண்டும்.

Disappointing.

Comments