மலையாளத் திரைப்படங்கள்


மனதைச் சற்று வேறு கோணத்திலிருந்து பார்த்தால் ஓர் உண்மை புலப்படுகிறது. நாம் பார்க்கிற மலையாளத் திரைப்படங்களில் அமைகிற எளிய/வலிய திரைமொழியை கதாப்பாத்திரங்களை தமிழில் கடைசியாக யார் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் 

1. சீனு ராமசாமி
2. மாரி செல்வராஜ் 

வணிக ரீதியாக சரியாகச் செல்லவில்லை என்றே நினைக்கிறேன் என்றாலும் கடைசியாக நான் பார்த்த நல்ல ஒரு திரைப்படம் கண்ணே கலைமானே. ஒரு பெயருக்கு மலையாளத் திரைப்படக்காரர்களிடம் போர் செய்கிற நாம் தான் இதுபோலப் படங்களை மொக்கை என்று வசதியாய்த் தவிர்த்துவிடுகிறோம். கண்ணே கலைமானே அவ்வளவு அற்புதமான விமர்சனங்களைப் பெறவில்லை என்பதாலோ என்னவோ அதை வெகு காலதாமதமாகவே பார்த்தேன். பார்த்ததும் என்னை நானே இகழ்ந்துகொண்டேன். ஒரு  நல்ல கலைஞனின் நேர்மையை இந்தச் சமூகத்தின் எந்தச் சொல்லின் பொருட்டும் நாம் சந்தேகிக்கவே கூடாது என்று நான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்ட படம். எந்த எதிர்பார்ப்புமற்றுப்  பாருங்கள். மிக எளிய, அற்புதமான படம். சீனு ராமசாமியால் மட்டுமே இதுபோன்ற படைப்புகளைத் தர இயலும். மாரி செல்வராஜும் நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை, அவரும் இன்னொரு சீனு ராமசாமி தான். நேர்மையான படைப்பாளிகள் அனைவருமே ஒரு மாரி செல்வராஜ், ஒரு சீனு ராமசாமி தான்.

Comments