ஜி.நாகராஜன் ஆக்கங்கள்"நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் எனக் கேட்டு தப்பித்துக்கொள்ள பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால், முழுமையும்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்."
~
ஜி.நாகராஜன்
~

இந்த காலகட்டத்திற்கு மிகப்பொருத்தமான கதைகள் ஜி.நாகராஜனுடையது தான். ஜி.என். சொல்லும் கதைகள் உண்மையானவை என்பதற்கு சான்றாகப் பல கதைகளை இந்த உரடங்கு காலத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். உண்மையை யாராலும் முழுமையாகச் சொல்ல முடியாது, ஒருபோதும். 

சொல்லவியலாத பல வலியை வீட்டிற்குள் அனுபவிக்கிறவர்களுக்கு ஜி.என்.னுடைய எழுத்து புரியும்.


640 பக்கங்கள்/575 ரூபாய்/காலச்சுவடு பதிப்பகம்

Comments