அம்பையும் இரண்டு சிறுகதைகளும்
யாரை வாசிப்பது யாரைத் தேடுவது யாரிடம் போய்ப் பேசுவது யாரேனும் மனசுக்கு நெருக்கமாய்ப் பேச பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிற பெண்கள் போய்ச் சேர வேண்டிய இடம் எழுத்தாளர் அம்பையின் மடி. அவரது கதைகள் தான் உங்களுக்குக் கிடைக்கிற அற்புதமான தாங்கும் மடி, நீங்கள் சாய்ந்துகொள்ள வேண்டிய சக பெண்ணின் தோள். அடிப்படையில் பெரும்பான்மையான பெண்கள்  யாரையாவது தேடிக் கொண்டிருப்பவர்கள் தான் உள்ளுக்குள். அவர்களுக்காகச் சொல்கிறேன். அம்பையைப் பிடித்துக்கொள்ளுங்கள். அவர் யாரென்று தெரிந்துகொள்ள அவரது இரண்டு கதைகளை வாசியுங்கள்.

1. காட்டில் ஒரு மான்
2. அம்மா ஒரு கொலை செய்தாள்

உங்களுக்கான நிம்மதியான உலகம் அது. ஒரு பெண் மருத்துவரை, பெண் டெய்லரைத் தேடிப் போகிறவர்கள் கண்டிப்பாக பெண் எழுத்தாளரைத் தேடிக்கொண்டு தான் இருப்பீர்கள் தெரியும். அப்படித் தேடவில்லையெனில் உங்களைத் தேடச் சொல்லிப் பரிந்துரைக்கிறேன். அம்பை தான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் அந்த முதல் கதை மருத்துவர்.

Comments