Power of Audio Books



தூக்கம் வராத இரவுகளில் கதைகள் உதவுவதைப் போல் வேறொன்றும் உதவுவதில்லை. (ஏன் தூக்கம் வருவதில்லை என்பதற்கு மதிய நேரத்தில், மாலை நேரத்தில் உறங்கிவிடுவது ஒரு பெரிய காரணமாக நிறைய பேரிடமிருந்து கேட்க முடிகிறது) .

மூளை சுறுசுறுப்பாக இருக்கும் நிலையில் கதை கேட்பதற்கும், உடல் சோர்வுற்றிருக்கும் போது கதை கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. The Key is "Diversion". மனத்தை எங்கெங்கோ அலையவிடாமல் வேறு எதாவதொன்றில் திசைதிருப்பி  ஒருநிலைப்படுத்துவது. Diversion + mindfulness என்று சொல்லலாம்.

100 சதவிகிதம் கதை கேட்கிற மனநிலையில் கூட, நீங்கள் வசதியாக 'படுத்துக்கொண்டு' கதை கேட்பீர்களேயானால் சற்று நேரத்தில் (குறைந்தபட்சம்) 80% நீங்கள் தூங்கிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. The posture matters. 

இரவில் படுத்திருக்கையில் கதை கேட்கத் தொடங்குவது மூளையை ஒரு குரலின் பாதைக்கு திசை திருப்பி உங்கள் மனதை ஒருமுகப்படுத்தும்.

ஏற்கனவே தூங்கத் தயாராயிருக்கிற உங்கள் மனதை, உடலை, ஒரு குரல் சற்று உந்தித் தள்ளுகிறது. இந்த உந்து சக்தி தான் குரல்கள். இந்தக் குரல்கள் உங்களுக்குப் பிடித்த நபரின் குரலாய் இருக்கும் பட்சத்தில் நீங்கள் வெகு விரைவில் தூங்கிவிட வாய்ப்பிருக்கிறது.  அந்நியக் குரலாய் இருக்கும் பட்சத்தில் அந்தக் குரலை மனம் ஏற்றுக்கொள்ளவே சற்று நேரமெடுத்துக்கொள்ளும். அதன் பின் இரண்டாம் சுற்று தான் உறக்கத்திற்குள் உங்களை அது அழைத்துச் செல்லும்.

கதைகளின் குறிக்கோளே ஒருவரை ஆற்றுப்படுத்துவது தான். தூங்குவதற்காகக் கதை கேட்பது தான் கதைகளின் இரண்டாவது முக்கியமான நோக்கம் என்றே நினைக்கிறேன்.

மற்றபடி ஒரு கதை மனதில் பதிவதற்கு நீங்கள் அந்தக் கதையை குறைந்தபட்சம் இரண்டு முறையாவது கேட்க வேண்டும், இரண்டு முறையாவது வாசிக்க வேண்டும். 

இசை இருக்கிறதே என்பார்கள் சிலர். இசை மனதை அலைய விடும். கட்டுப்படுத்தாது. நான் தூங்குவதற்காக பாடல்கள் கேட்க ஆரம்பித்து மனம் ஒரு சோர்வு நிலையிலிருந்து குத்துப்பாடலின் தாளத்தைப் போல் ஒரு குதூகல மனநிலைக்குத் தான் சென்றிருக்கிறது பல தடவை. ராஜா பாடல்களின் மேதைமையில் பல நாள் என் தூக்கத்தை சந்தோஷமாக பறிகொடுத்திருக்கிறேன். தூங்க வைப்பதில் இசையைவிட குரல்களே, கதைகளே அதிகத் திறன் வாய்ந்தவை. 

உங்கள் குரலை, உங்கள் கதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

(இது இன்னும் ஆழமாக எழுதப்படவேண்டிய ஒரு தலைப்பு. ஆனால் இந்த அளவிற்கு மேல் ஒரு முக நூல் பதிவு நீண்டால் தாங்காது என்ற அளவில் இது போதும்.)

Comments

Popular Posts