குறள் 1094


யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

நான் பார்க்கும் போது நிலத்தைப் பார்ப்பாள்.
நான் பார்க்காதபோது என்னைப் பார்த்து மெல்லச் சிரிப்பாள்

~
~
ஒரு குறள் ஒரு நாளுக்கான ஒளியைத் தருகிறதா இல்லையா. அதுதான் திருக்குறளின் மகத்துவம். தமிழர்களின் பைபிள் இதுதான். தமிழர்கள் என்பதைக் கடந்து உலக மக்களின் பைபிளாகக் கருதப்படவேண்டிய அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட தெய்வத்தின் குரல் ஒன்றுண்டெனில் அது திருக்குறள் தான்.

சகல நோய்களின் நிவாரணி இந்தத் தமிழ் மொழியும் , இதில் எழுதப்பட்ட திருக்குறள் போன்ற கவிதைகளும்.


குறள் 1094

Comments