புத்தகப் பரிந்துரைஃபிராய்டின் புத்தகங்கள் ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வைத்திருக்கிற போதும் அதை மீள்வாசிப்பதற்கான தேவையை மீண்டும் ஒரு முறை நினைவூட்டிய அற்புதமான புத்தகம் இது. உண்மையில் ஒரு புத்தகம் ஒவ்வொரு முறை மீண்டும் வாசிக்கப் படும் போதும் அது வேறு புத்தகமாகவும், வாசிக்கிற நாமும் வேறு மனிதராகவும் பரிணமித்து வாசிக்கிற அதிசயம் நிகழும். வாசிப்பின் தித்திப்பே அதுதானே. Those are called classics! நிறைய சிந்தனையாளர்களைப் பற்றி இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். குறிப்பாக பிராய்டின் மகளை மற்றும் ரேச்சல் கார்சனை.

Silent Spring எழுதிய சூழலியல் எழுத்தாளரான ரேச்சல் கார்சன், சமீபத்தில் ஈர்த்த மிகப்பெரிய தலைவியாக அவரைப் பார்க்கிறேன். Silent Spring மௌன வசந்தம் என்று தமிழில் கிடைக்கிறது. ஒரு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கி வீட்டிலேயே வைத்திருக்கிற நியாபகம். இன்று அதை ஆங்கிலத்தில் வாசித்துகொண்டிருக்கிறேன். அவருடைய The sea around us, under the sea wind ஆகிய புத்தகங்களையும் அடுத்து வாசிக்க எண்ணம். ஒருவர் மேல் கொண்ட மதிப்பும் அவர் எவ்வளவு நேர்மையான ஆளுமை என்பதும் தான் அவரை மேலும் மேலும் வாசிக்கச் சொல்கிறது இல்லையா.

இன்னும் பல குறிப்புகளை, பல சிந்தனைகளுக்குத் தூண்டிய புத்தகம் இந்த Great Thinkers. நல்ல கனம். ஒரு கிலோ இருக்கும். நிறைய மனிதர்களை, உண்மையான தலைவர்களாகிய சிந்தனையாளர்களை அறிந்துகொள்வதுதான் நான் விரும்பி விரும்பி பெற்றுக்கொள்கிற ஒரே போதை. 

"Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people"

என்பாரே கார்ல் மாக்ஸ்

அதைப் போல புத்தகங்களே எனக்கான போதை மருந்துகள். 

இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம், YouTube ல் காணொளிகளாகவும் பார்க்கக் கிடைக்கின்றன. (The School of Life Channel). நல்ல எளிய அறிமுகங்கள். 'நீட்சே'வின் காணொளியில் இருந்து பார்க்கத் தொடங்கலாம். நீட்சேவை "நீட்சா" என்று அழைக்க வேண்டும் என்பதையே முப்பது வயதிற்குப் பின் தான் தெரிந்துகொண்டேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் தமிழுக்கு நீட்சே என்பது தான் கொஞ்சம் இசைமையமாகவும் பொருத்தமாகவும் இருக்கிறபடியால் நீட்சே என்றே அழைக்க எண்ணம்.

Comments