சித்தார்த்தா - ஹெர்மன் ஹெஸ்ஸே
சித்தார்த்தன் எனக்குத் தந்த வெளிச்சம் மிகப்பெரியதென நினைக்கிறேன். ஹெர்மன் ஹெஸ்ஸேவே ஒரு புத்தர் தான். ஒரு புத்தனாவது சுலபம். முதல் படி. தன்னையே விசாரிக்கத் தொடங்கவேண்டும்.
தன்னை அடையப் பயணிக்க வேண்டும். தன்னை அறிகிற வழிகளின், பாதைகள் தப்பும்,பாதைகள் இடரும், பாதைகள் வெளிச்சமாய்த் துலங்கும்.
ஒவ்வொரு புலர்தலிலும் வாழ்வென்னும் பெருநதியில் நீராடுகையில் தன்னில் மிதக்க வேண்டும், தன்னைக் கொண்டாட வேண்டும், எல்லாவற்றுக்கும் பின் பூரண மகிழ்வோடும், ஆத்மதிருப்தியோடும், கருணையின் பரிபூரண எளிமையோடும், தன்னை அல்லது தான் என்கிற ஒன்றுமற்றதை, அல்லது யாதுமானவொன்றை ஒளியின் ஜுவாலைக்குள் மெல்லத் தள்ள வேண்டும்.
~
#Siddhartha #hermanhesse #buddha
Comments
Post a Comment