அரிய வகைத் துயர்

அரிய வகைத் துயர் முளைக்கிற
காடென்று சொன்னார்கள்
நான் முதலில் நம்பவில்லை

பிழையற்ற மௌனத்தின் அலைகள்
நீரின் மேற்பரப்பில் பிளிரிக்கொண்டிருந்த
காட்சியைப் பார்த்துக்கொண்டே
நதியின் கரையோரத்தில்
நடந்து போனேன் நேற்று
காதுகளைத் துளைத்து
உயிரை அடைக்கிற ஓலம்

கண்ணுக்குத் தெரிந்திருக்கக் கூடாது
உயிருக்குள் பாய்ந்திருக்கக் கூடாது
எதுவும்

மௌனத்தின் பிளிரல்கள்
மனதுக்கு வாதை

அரிய வகைத் துயர் முளைக்கிற காடென்று
மனிதர்கள் தான் சொன்னார்கள்
அதனால்தான் நம்பவில்லை

அரிய வகைத் துயர் முளைக்கிற காடென்று
மனிதர்களே காண்பித்தார்கள்
அதனால்தான் நம்பவேண்டிய சூழல்
~
சேரவஞ்சிA pregnant wild elephant had fallen victim to an act of human cruelty on May 27 after a pineapple filled with powerful crackers offered by a man exploded in her mouth when she chomped on it. Human beings don't deserve this magnificent mother earth

Comments