தொ.பரமசிவன் - ஆழ்ந்த அஞ்சலிசமணத்தைப் பற்றிய அறிதல் தொ.ப விலிருந்து தான் தொடங்கியதென்று சொல்லவேண்டும்.

தொ.ப இல்லையெனில் நான் இந்தத் தெளிவை வேறு யார் மூலமாவது அடைந்திருக்கலாம். என்றாலும் தொ.ப தான் மனதிற்கும் கைகளுக்கும் முதலில் அகப்பட்டவர்.

காரணம் அவருடைய ஆய்வில், எழுத்தில் இருந்த எதிர்க் கேள்வி எழுப்ப முடியாத சத்தியமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

உண்மை, தகித்திருப்பவர்களின் வாசலை நோக்கிய பயணத்தை எப்போதுமே நிறுத்தியதில்லை. தொய்வற்ற பயணமது.

இந்து மதம், சமணம், வைதிகம், தமிழர் பண்பாடு, சாதியம் என தொ.ப பாய்ச்சிய அறிவொளி மிகப்பெரியது. அதை அவர் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிற இடத்திலிருந்து ஏந்திச் சொல்வோம்.

மதங்களை விட மானுடம் பெரியது எனக் கற்பித்த ஆசிரியரை இதயப்பூர்வமாக நினைவிலிறுத்திக்கொள்கிறோம்.


#தொபரமசிவன்


 

Comments