நிறங்களின் மொழி - மனோகர் தேவதாஸ் 1. நிறங்களின் மொழி - ஓவியர் பத்மஸ்ரீ மனோகர் தேவதாஸ்

2. நிறங்களின் உலகம் - எழுத்தாளர் தேனி சீருடையான்

இப்படி தலைகீழாக இரண்டு புத்தகங்கள் அச்சிடப்பட்ட ஒரு தொகுப்பை இதுவரை கண்டதில்லை. விகடன் பதிப்பகத்தின் புது முயற்சி தான் எனினும். நிறங்களின் உலகம் பகுதியை விகடன் பத்திரிகை லே அவுட் போலவே அச்சிட்டிருப்பது வாரப்பத்திரிகை வாசிப்பதைப் போல வாசிப்பின் மீது ஒரு சலிப்பை உண்டாக்கிவிட்டது. கூடவே புத்தகத்தின் கனமும் தூக்கி வாசிக்கிறதற்குள் போதும் போதும் என்றாகிப்போனது. போதாத குறைக்கு தலைவலி உண்டாக்குகிற நிறைய எழுத்துப்பிழைகள். ஒரு நல்ல புத்தகத் தயாரிப்பில் இதெல்லாம் ஒரு தீவிர வாசகனாய் என்னால் சகித்துக்கொள்ள இயலாதவை.

சரி.

இவற்றையெல்லாம் கடந்து புத்தகத்திற்குள் நுழைந்தால். இந்த இரண்டு புத்தகத்தையும் ஒரே புத்தகமாய் விகடன் இணைத்திருப்பதற்கான காரணம். ஓவியர் மனோவும், தேனி சீருடையானும் காலப்போக்கில் தங்கள் கண் பார்வையை இழந்த ஆளுமைகள். அதன் பின் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள். செய்த சாதனைகள்.
~
~

1.

ஓவியர், ஐயா பத்மஸ்ரீ மனோகர் தேவதாஸ் மிகச்சிறந்த ஓவியர் மற்றும் எழுத்தாளரும் கூட. திருமணத்திற்குப் பின் ஒரு கட்டத்தில் மனோவுக்கு பார்வைக் குறைபாடு ஏற்படத் தொடங்க, அவருடைய துணையான மஹிமாவுக்கும் ஒரு விபத்தில் உடல்நலம் குன்றிப்போய் படுத்த படுக்கையாகிப் போக. இருவரும் சேர்ந்து அதன் பின் நிகழ்த்திய கலை சார்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையின் வெளிப்பாடுகள் அடங்கிய ஓவியக் குறிப்புகளை வாசித்துவிட்டு தும்பி பக்கத்தில் மனோ பேசும் காணொளியைப் பார்த்தேன். ஒரு நெகிழ்ச்சியான திரைப்படம் பார்த்த மன நிறைவு.
~
~

2.

மறுபுறம் சீருடையான் தான் கண்பார்வை இழந்த கதையையும், அதன் பின் சொல், சப்தம், ஒவ்வொன்றும் நிறக்குறியீடுகளால மாறிப்போகிற கதையை விவரிக்கிறார். அப்பா பொரிக்கடை அடுப்பில் நிற்பவர். அம்மா புளி தட்டுகிறவர். கஷ்ட ஜீவணம். ஒவ்வொரு வேலை சோற்றுக்கும் சிரமப்படும் குடும்பச்சூழல். இதற்கிடையில் பார்வையும் பரிபோகிறது. சூழல் எத்தனை இறுக்கமானது. அதை எழுத்தில் கொண்டு வர ஓரளவு முயற்சித்திருக்கிறார். இலக்கிய அந்தஸ்த்தை மீறி வலிகள் மிகுந்த இந்த அனுபவப் பகிரலுக்காக வாசிக்கப்படவேண்டிய அனுபவம்.

~
~
~
~

#tamilbookrecommendations
#tamilbooksreview

Comments