எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர் - டி.எம்.கிருஷ்ணா

 

"பாரத் ரத்னா" மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கை ஒருபக்கம் வெற்றிகளால் ஆனது என்றால் மற்றொரு பக்கம் கட்டுப்பாடுகளால், கர்நாடக இசையை தங்களுக்கு மட்டுமே உரிய ஓர் நிகழ்த்துகலை என்று கருதிய பார்ப்பன இசைக் கலைஞர்களால் இளக்காரமாகப் பார்க்கப்பட்ட நிலையையும் உள்ளடக்கியது என்கிறார் கிருஷ்ணா.

புத்தகத்தைப் நீங்கள் புரிந்துகொள்ள புத்தகத்திலிருந்தே சில வரிகள் உங்களுக்கு

எம்.எஸ்.ஸின் இசையை அவரது ஆசானும், கணவரும், மதியூகியுமான டி.சதாசிவம் திட்டமிட்டு சந்தைப்படுத்தினார்

மக்கள் தன்னுடைய குரலை மட்டுமே பாராட்டுவதை எண்ணி எம்.எஸ். நொந்துகொள்வதுண்டு என்று அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து அறிந்தவன் நான்

மதுரையில் வீணைக் கலைஞராக மதிக்கப்பட்ட ஒரு தேவதாசிப் பெண்மணிக்கு 1916 இல் சுப்புலட்சுமி பிறந்தார். தேவதாசி குலவழக்கப்படி தன் அன்னையின் பெயரையே தன் முன்னெழுத்துக்களாக வைத்துக்கொண்டார். அவரது அன்னை சண்முகவடிவு திருமணமாகாதவர். தகப்பனார் யார் என்பது பெயரற்ற புகைமூட்டத்தில் மறைந்துவிட்டது. எம்.எஸ்.சைப் பொறுத்த வரை அவர் மதுரையைச் சேர்ந்த பிராமண வழக்கறிஞர் சுப்பிரமணிய ஐயர்.

20 வயதில் தன் தாய்வீட்டிலிருந்து பிரிந்து சென்ற எம்.எஸ். சென்னையில் வசிக்கிற ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிராமணரான டி.சதாசிவத்தின் வீட்டில் தஞ்சம் அடைகிறார். ஆனந்த விகடனிலும் கல்கியிலும் வேலை செய்த, தொடர்புகள் வைத்திருந்ததன் மூலம் பத்திரிகைகளை எம்.எஸ்.ஸை விளம்பரப்படுத்துவதற்குச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எம்.எஸ்.எழுதிய காதல் கடிதங்களை தன் இறுதி நாள் வரை ஜி.என்.பி. பத்திரமாக வைத்திருந்தார்.

கர்நாடக சங்கீத உலகில் இவரது சமகாலத்தவரான பிராமண இசைக்கலைஞர் டி.கே.பட்டம்மாளுக்குத் தந்த பாராட்டுகளை , அங்கீகாரத்தை எம்.எஸ்.ஸுக்கு தரவில்லை என்பது குறித்து அவர் பெரிதும் வருத்தப்பட்டிருக்கவேண்டும்.

🌀


#mssubbulakshmibooks# tmkrishna #tamilbooksreview


நண்பர்களுக்கு இந்த அறிமுகம் சுவாரசியம் அளிக்கக் கூடும் என்று நினைக்கிறேன். வேற்று சாதியினரை, வர்க்கத்தினரை நூதனமான புறக்கணிக்கும் போக்கை, பெண் கலைஞர்களின் மீது நூதனமான இழையில் கோலோச்சும் தந்தைவழிச் சமூக முறை அடக்குமுறைகளையும், இன்னும் பல மேற்சொன்ன செய்திகளையும் வாசிக்க அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்

Comments