சூழலும் சாதியும் - நக்கீரன்


 பல நூல்களுக்கு இட்டுச்செல்கிற ஒரு நூல் என்ற வகையில் இந்நூலும் இதன் தனித்தன்மையைப் பெறுகிறது. 


பேராசிரியர் தொ.ப, 

டி.டி.கோசாம்பி, டோனி வெண்டிகர், ஆ.சிவசுப்ரமணியன், பக்தவத்சல பாரதி, அம்பேத்கர், பி.டி.சீனிவாச ஐயங்கார், டோனி ஜோசப், ராகுல சாங்கிருத்யாயன் என சான்றோர் பலரின் குறிப்புகளை சான்றாக்கி எழுதப்பட்ட நூல் என்பதால் இதன் தரத்தைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. 


மேற்கண்ட எல்லோரின் துணையோடும் உருவாக்கப்பட்டிருக்கிற எளிமையான சிறந்த கட்டுரைத் தொகுப்பு. ஆரிய வருகை, பார்ப்பனியத்தின் உருவாக்கம், மற்றும் சூழலியல் ரீதியாகப் பார்ப்பனியம் கட்டமைத்த சாதிய ஒடுக்குமுறைகள் குறித்த எளிமையான கட்டுரைகளடங்கிய கையடக்கப் பதிவு இந்நூல்.


இது இன்னும் பல நூல்களை வாசிக்க உந்தித்தள்ளும் என்கிற வகையில் இதைப் பரிந்துரைக்கிறேன்.


நெறி செய்த நூல்கள் என 65 நூல்களை பின்பக்கத்தில் பட்டியலிட்டிருக்கிறார். 


கடைசியாக எழுத்தாளர் அருந்ததி ராயின் the doctor and saint வாசித்தபோது இத்தனை குறிப்புகளைப் பார்த்தது. அடுத்ததாக இப்போதுதான் இத்தனை நெறிசெய் நூல்களைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கிறேன்.


எழுத்தாளர் நக்கீரன் அவர்களுக்கு நன்றியும், அன்பு வாழ்த்தும்.

Comments