கவிஞர் சச்சிதானந்தன் கவிதைகள்


கவிதை என்னுடைய மதம்
மதம் இல்லாதவர்களின் மதம்

— சச்சிதானந்தன் —
மலையாள இலக்கியத்தில் இன்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களில் இந்த உயர்வுக்கு முற்றிலும் தகுதியான இலக்கிய ஆளுமை சச்சிதானந்தனே. அவர் அளவுக்கு மலையாளக் கவிதையில் தொடர்ந்து இயங்கியவர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். கால அளவிலும் எண்ணிக்கையிலும் அவரது கவிதைப் பங்களிப்பு மிக அதிகமானது; விரிவானது; வித்தியாசமானது.

எல்லாக் காலங்களிலும் அந்தந்தக் காலத்தின் கருத்தோட்டங்கள் கவிதையைப் பாதிக்கின்றன. ஆனால், அவை வெறும் கருத்துகளின் வடிவமாக வெளிப்பட்டால் மட்டும் போதாது. அனுபவமாகவும், பார்வையாகவும், புதிய உருவத்துடனும், புதிய நடையுடனும் வெளிப்பட வேண்டும். இதை நவீனத்துவத் தலைமுறை சாத்தியமாக்கியது. நவீனத்துவத் தலைமுறை செயல்பட்ட காலத்தில் இருத்தலியமும் மார்க்ஸியமும் நிகழ்காலச் சிந்தனையின் இரு கருத்தாக்கங்களாக இருந்தன. ஆனால், அந்தக் கருத்தாக்கங்களின் சூத்திரங்களை அல்ல; அவை சார்ந்த வாழ்வியல் அனுபவங்களையே நவீனத் தலைமுறை கவிதையாக்கியது. கவிஞர்கள் பார்த்ததும் அனுபவித்ததுமானவையே கவிதைகளாயின. சரியாகச் சொன்னால் அனுபவமே கவிதை - கருத்தாக்கங்கள் அதை அணுகும் வழி என்பதை நவீனத்துவக் கவிதை நிறுவியது. சச்சிதானந்தன் இதைத் தனது கவிதைகளில் தொடர்ந்து முன்வைத்தார்.

இந்தக் கவிதைகள் அவருடைய நீண்ட கவிதைகளின் சிறு பகுதிகள்.
உங்களுக்கு அதன் சுவையைத் தர அவற்றில் சிறு துளிகளை எடுத்தாண்டிருக்கிறேன்.

தொகுப்பு | ஆலிலையும் நெற்கதிரும்  தமிழில் | சிற்பி 

Comments